பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 புலவர் கா. கோவிந்தன் நோயின்று உய்த்தல், நுவலுழித் தோற்றம், தந்துநிரை, பாதீடு, உண்டாட்டுக் கொடை என வந்த ஈரேழ் வகையிற்று ஆகும்.” "மறம். கடைகூட்டிய குடிநிலை துடிநிலை) , சிறந்த கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே.” “வெறியறி சிறப்பின் வெவ்வாய் வேலன் வெறியாட்டு அயர்ந்த காந்தளும், உறுபகை வேந்திடை தெரிதல்வேண்டி, ஏந்துபுகழ்ப் போந்தை, வேம்பே, ஆர் என வரூஉம் மாபெரும் தானையர் மலைந்த பூவும், வாடா வள்ளி, வயவர் ஏத்திய ஓடாக் கழல்நிலை, உளப்பட ஓடா உடல்வேந்து அடுக்கிய உன்னநிலையும் மாயோன் மேய மன்பெரும் சிறப்பின் தாவா விழுப்புகழ்ப் பூவை நிலையும் ஆரமர் ஒட்டலும், ஆபெயர்த்துத் தருதலும், சீர்சால்வேந்தன் சிறப்பு எடுத்து உரைத்தலும், தலைத்தாள் நெடுமொழி தன்னொடு புணர்த்தலும், மனைக்குரி மரபினது கரந்தை அன்றியும், வருதார்தாங்கல் வாள்வாய்த்துக் கவிழ்தல் என்று இருவகைப் பட்ட பிள்ளை நிலையும், வாள்மலைந்து எழுந்தோனை மகிழ்ந்துபறை தூங்க, நாடு அவற்கு அருளிய பிள்ளை யாட்டும், காட்சி கால்கோள், நீர்ப்படை, நடுகல் சீர்த்தமரபில் பெரும்படை வாழ்த்தல் என்று இருமூன்று மரபின் கல்லோடு புணரச் சொல்லப்பட்ட எழுமூன்று துறைத்தே" -தொல்: புறத்திணை: 15.