பக்கம்:பண்டைத் தமிழர் போர் நெறி.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 வஞ்சியும் காஞ்சியும் மக்கள் நாகரிக வாழ்வில் முன்னேற, அவர்களுடைய தேவைகளும், அதற்கேற்பப் பல்வேறு வகையில் பெருகத் தலைப்பட்டன. பருமரக் காடு செறிந்த மலை நாட்டில் வாழ்ந்திருந்த போது, அம்மலை நாட்டு மண், மனிதனின் உழைப்பை எதிர் நோக்காமலே வாரி வழங்கிய காய்களையும், கனிகளையும், காட்டு விலங்குகளின் இறைச்சியையும் உண்டு உடலோம்பி உயிர் வாழ்ந்திருந்த மனிதனுக்கு, அவை அருகிய காலத்தில் தேவைப்பட்டது, முல்லை நிலத்து ஆயர்களின் ஆனிரைகள் மட்டுமே. ஆகவே, ஆதி மனிதன் மேற்கொண்ட முதற் போர், ஆனிரை கவரும் போரும், அதை மீட்கும் போரும் ஆகிய வெட்சிப் போராய் அமைந்தது. மனிதன் வளர்ந்தான்; அவன் தேவைகளும் வளர்ந்தன. பண்டு காயையும், கனியையும், கிழங்கையும், கீரையையும், காட்டு உயிர்களின் ஊனையும் உண்டு பசியொழிந்து வாழ்ந்திருந்த மக்கள், வயிற்றுப் பசியைப் போக்க உதவுவதே உணவு; ஆகவே, அது போக்கும் எதையும் உண்ணலாம் என்று எண்ணி, அக்காய் கனி, கிழங்கு கீரைகளையே இன்னும் உண்ணுவதில்லை; நெய்விரவு கறிச்சோற்றினையே முப்போதும் உண்ணவும், ப.த.போ.நெ-7