00 வேண்டும்போது, "புண்ணியனே ! நான் புழுவாய்ப் பிறந்திட்டாலும் கவலையுறேன்; ஆனால் உன்னை நான் நினைப்பதற்குரிய மனத்தை மட்டும் எனக்கு 2 வாரமாகத் தரவேண்டும்" என்னும் பொருள்பட 'புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா உன்னடி வழுவா திருக்க வரம் தர வேண்டும்' என்று வேண்டுகிறார். என்மனத்தே, உயர்ந்த-தாழ்ந்த இனத்தவர் உலகில் பல ஆயிரக்கணக்கான இனமக்கள் 2 இருந்தாலும், ஓர் இனம் உயர்ந்ததா? தாழ்ந்ததா? வளர்ச்சியுற்றதா? குறைவுடையதா? சிறப்பற்றதா? பெருமைக்குரியதா? சிறந்ததா? அல்லவா ? என்பதைக் கண்டறிவதில், “பண்பாடு'-‘நா கரிகம்' ஆகிய இரண்டு தன்மைகளை வைத்துத்தான், எடை போட்டுப் பார்க்கிறார்கள் பேரறிஞர்கள். பண்பாட்டால்-நாகரிகத்தால் உயர்ந்த இனத் தவர் என்று கணக்கிடும்போது, தமிழர்-கிரேக்கர் உரோமானியர் -எகுபதியர்- பாபிலோனியர்-அராபியர்- சுமேரியர்-ஆரியர் - மங்கோலியர் போன்றவர்களை உயர்ந்தோர் பட்டியலில் சேர்க்கின்றனர். ஆப்பிரிக் கர்கள்-சிவப்பு இந்தியர்கள்- எஸ்கிமோக்கள்.மலை வாழ் மக்கள் போன்றவர்களைத் தாழ்ந்த நாகரிகமற்ற பண்பாடற்ற காட்டுமிராண்டியர் பட்டியலில்சேர்க்கின்றனர். தமிழர் பண்பாடு செம்மையாகவும், சிறப்பாகவும் உருவாக்கப் பட்டு-வளர்க்கப்பட்டு-போற்றப்பட்டுக்- காப்பாற்றப்
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/10
Appearance