உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

g பட்டு வந்த பண்பாடுகளில், 'தமிழர் பண்பாடு' தலைசிறந்த ஒன்றாகும். தமிழர் போற்றிப்பாராட்டிச் சிறப்பித்து வந்த பண்பாடுகள் என்ன என்ன?எப்படிப் பட்டவை? என்பவற்றையெல்லாம் தொல்காப்பியத்தி லிருந்து, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் படைப்புக்கள் வரையில் உள்ள இலக்கியங்களில் பொதுவாக 4 விரவிக் காணப்படுகின்றன என்றாலும், வேறு எந்த மொழியிலும் இல்லாத அளவுக்குக் குறிப்பாகவும், சிறப்பாகவும், சீராகவும், செம்மையாகவும், அடுக்கடுக்காகவும், அழுத்தந்திருத்தமாகவும் தமிழர் பண்பாட்டுக் கருத்துக்களைச் சொல்லழகு.பொரு ளாழம்-அணிவனப்பு-ஓசை இன்பம் ஆகியவற்றோடு நயம்பட எடுத்துரைக்கும் திறம்படைத்த முழுநூல்கள் செந்தமிழ் மொழியில் பலப்பல உண்டு. அவற்றில் 'சிறப்புற்றுத் திகழும் சிலவற்றைக் குறிப்பிட வேண்டு மாயின், தொல்காப்பியப் பொருளதிகாரம் திருக்குறள் பு நாலடியார் இன்னா நாற்பது இனியவை நாற்பது ஆத்தி சூடி கொன்றை வேந்தன் அறநெறிச் சாரம் சிறுபஞ்சமூலம் 2859-2