திரிகடுகம் நன்னெறி வெற்றிவேற்கை 10 பாரதியார் ஆத்திசூடி பாரதிதாசன் ஆத்திசூடி போன்றவற்றைக் குறிப்பிடலாம். பழம்பெருங் காலந்தொட்டுத் தமிழ்ச் சான்றோர் களும், தமிழ்ப் பெருங்குடி மக்களும் எப்படிப்பட்ட சிறந்த பண்பாடுகளைப் போற்றியும், பாராட்டியும், மதித்தும், துதித்தும், வாழ்த்தியும், வரவேற்றும் வந்தனர் என்பதை, மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள நூல்கள் வலியுறுத்தியிருக்கும் அறவுரைகளும் அறிவுரைகளும் தெள்ளத் தெளிவாகக் காட்டும். வள்ளுவர் வலியுறுத்தும் பண்பாடு மனிதனின் உயர்வை எடுத்துத் காட்டுவது அவனது நிலையல்ல; அவனது நினைப்பேயாகும். நிலைக்கு ஏற்ற நினைப்பு இருக்கவேண்டும். உயர்ந்த நிலைக்கு ஏற்ப, உயர்ந்த நினைப்பும் இருக்க வேண்டும். மேலான நிலையில் இருந்தாலும், கீழான நினைப்புடையவராக ஒருவர் இருப்பாரேயானால், அவரை மேலானவராகக் கருதமுடியாது. கீழான நிலை யிலிருந்தாலும் மேலான நினைப்புடையவராக ஒருவர் இருப்பாரேயானால் அவரைக் கீழானவராகக் கருதக் இதனை வள்ளுவப் பெருந்தகையார், கூடாது.
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/16
Appearance