என் 11. மேலிருந்தும் மேலல்லார் மேலல்லர்; கீழிருந்தும் கீழல்லார் கீழல் லவர் று தெளிவுபடுத்துகிறார். (குறள் - 973) - பெருமைப்பண்பு' எது? 'சிறுமைப்பண்பு' எது? என்பதைத் திருவள்ளுவர் பெருமான் திட்டவட்ட மாகப் பாகுபடுத்திக் காட்டுகிறார். செருக்கு இல்லா மலிருப்பது பெருமைப்பண் யாகும்; செருக்கு மிகுந்து அதன் எல்லைக்கே போய் விடுவது சிறுமைப்பண்பாகும். பெருமை பெருமிதம் இன்மை; சிறுமை பெருமிதம் ஊர்ந்து விடல். (குறள் 979) பெருமைப்பண்பு பிறருடைய குறைபாட்டை எப்பொழுதும் மறைக்கும்; சிறுமைப்பண்பு பிறரு டைய குற்றங்குறைகளை எப்பொழுதும் எடுத்துச் சொல்லிக்கொண்டே இருக்கும். அற்றம் மறைக்கும் பெருமை; சிறுமைதான் குற்றமே கூறி விடும் பெருமைப்பண்பு எங்கும், (குறள்-980) எக்காலத்திலும் பணிந்தே நடக்கும்; சிறுமைப்பண்பு எப்பொழுதும் தன்னைத்தானே வியந்து பாராட்டிக்கொண்டிருக்கும். பணியுமாம் என்றும் பெருமை; றுமை அணியுமாம் தன்னை வியந்து (குறள் -978) பெருமைப்பண்பு அறிவில் பெரியோர்களை எப்பொழுதும் விரும்பிப் போற்றும்; சிறுமைப்பண்பு அப்படிப்பட்ட பெரியோரின் சிறப்பை உணரும் உணர்ச்சியைக் கொண்டிருப்பதில்லை.
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/17
Appearance