உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 சிறியார் உணர்ச்சியுள் இல்லை பெரியாரைப் பேணிக்கொள் வேம் என்னும் நோக்கு (குறள்-976) பண்பாடுடையவனாக ஒருவன் திகழ்வதற்கு எவ்வெவற்றை அடிப்படையாகக் கொண்டிருக்க என்பதைப் பொய்யாமொழிப் புலவர். வள்ளுவர் திட்டவட்டமாக வரையறுத்துக் கூறி வேண்டும் யுள்ளார். பண்பாடுடையவனாக வாழும் ஒரு நல்வழியைப் பெறவேண்டுமாயின், எவரிடத்திலும் எளியமுறையில் பழகவேண்டும்; அப்படிச் செய்யின் பண்பாடு எளிதில்' கிட்டும். எண்பதத்தால் எய்தல் எளிது என்ப யார்மாட்டும் பண்புடைமை என்னும் வழக்கு பண்பாடுடையவனாக (குறள்-991), வாழ இரண்டு நல்வழி வாய்ப்புக்கள் அமையவேண்டும்; ஒன்று அவன் அன் புடையவனாக இருக்க வேண்டும். இரண்டு அவன் உயர்ந்த குடியில் பிறந்த தன்மையைக் கொண்டிருக்க. வேண்டும். அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் இவ்விரண்டும் பண்புடைமை என்னும் வழக்கு (குறள் - 992) மனிதனோடு மனிதனை ஒப்பிட்டுப் பார்க்க, பண்பாடுதான் ஏற்றுக்கொள்ளக்கூடிய சிறந்த அளவு கோலாகும். ஒத்த உடல் தோற்றங்களை வைத்துக் கொண்டு, ஒப்புமை எடைபோடுவது கொள்ளத் தக்கதன்று. உறுப்பு ஒத்தல் மக்கள் ஒப்பு அன்றால் வெறுத்தக்க பண்புஒத்தல் ஒப்பதாம் ஒப்பு (குறள் - 993)