உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 பண்பாடுடையவர்களால் இயக்கப்படுவதால்தான் உலகம் உயிரோடு இலங்குவதாக இருந்து வருகிறது; அப்படிக்கு இல்லை என்றால், உலகம், மண்ணோடு மண்ணாய் மாய்ந்துவிட்டதாகத்தான் வேண்டும். கருதப்பட பண்புடையார்ப் பட்டுண்டு உலகம்; அது இன்றேல் மண்புக்கு மாய்வது மன் (குறள் - 996) ஒருவன் அறிவு இல்லா தவனாக இருந்தாலும், அவன் பண்பாட்டோடு இருப்பானேயானால், அவனை மனிதன் என்று போற்றலாம்; ஒருவன் அரத்தின் கூர்மைபோல் கூரிய அறிவுடையவனாக இருந் தாலும், அவனிடத்தில் பண்பாடு இல்லையென்றால், அறவே பண்பாட்டை எதிர்பார்க்கமுடியாத மரத் திற்குச் சமமாகத்தான் அவனைக் கருதவேண்டும். அரம்போலும் கூர்மைய ரேனும் மரம்போல்வர் மக்கட்பண்பு இல்லா தவர் (குறள்-997) நன்மையைப்புரிதல், நீதியை நிலைநாட்டுதல், பிறர்க்குப் பயன்பட வாழ்தல் என்பவை பண்பாடு களாகும். இத்தகைய பண்பாடுகளைக் கொண்டிருப் பவரைத்தான், உலகத்தார் பாராட்டிக்கொண்டாடுவர். நயனொடு நன்றி புரிந்த பயனுடையார் பண்புபா ராட்டும் உலகு சால்பும் அறமும் (குறள் - 994) தமிழரின் மிக உயர்ந்த பண்பாட்டை இரண்டு

  • சிறந்த சொற்கள் உணர்த்திக் கொண்டிருக்கின்றன.

அவை ‘சால்பு -'அறம்' என்னும் இரண்டுசொற்களாகும்.