உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 போற்றுதற்குரிய எல்லா நற்பண்புகளும் மாட்சிமைப் பட்ட ஒரு நிலையைக் குறிக்கும் சொல்தான், 'சால்பு' என்பது. சால்பு உடையவர்தான் ‘சான்றோர்’ .எனப் போற்றப்படுவர். போற்றுதற்குரிய எல்லாக் கடமை களும் ஒருங்கிணைந்த ஒரு நிலையை உணர்த்தும் சொல்தான் ‘அறம்' என்பது. சிந்தனையின் மாட்சியை வெளிப்படுத்துவது 'சால்பு'. செயலின் மாட்சியை உணர்த்துவது 'அறம்'. பண்பாடுகளின் நலந்தான், சான்றோரின் நலம் என்று கூறப்படுவதாகும்; மற்றமற்ற நலங்கள் எந்த. வொரு நலத்திலும் படுவன அல்ல, பொருத்திவைத்து எண்ணம் குணநலம் சான்றோர் நலனே; பிறநலம் எந்நலத்து உள்ள தூம் அன்று (குறள் - 982) 'சால்பை'ப் பற்றிக் குறிப்பிடும்போது வள்ளுவப் பெருந்தகையார், பிறருடைய தீமையை எடுத்துச் சொல்லாத நற்பண்பே சால்பாகும்" ... ... பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு' என்றும், (குறள்-984) “தமக்கு எந்த வகையிலும் ஒப்பிட முடியாத. தாழ்ந்தோரிடத்திலும், தோல்வியை ஏற்றுக்கொள்ளும் பண்புதான் சால்புக்கு உரைகல் போல் மதிப்பிடும். கருவியாகும்" 'சால்பிற்குக் கட்டளை யாதெனில் தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்' (குறள் - 986) என்றும்,