15 " "துன்பத்தைச் செய்தவர்க்கும் இனிய உதவி களைச் செய்வதுதான், சான்றோரின் சால்புக்கு எடுத் துக்காட்டாகும்" ‘இன்னா செய் தார்க்கும் இனியவே செய்யாக்கால் என்ன பயத்ததோ சால்பு' என்றும், - (குறள் - 987) "சால்பு என்னும் கட்டடத்தைத் தாங்கி நிற்கும் ஐந்து தூண்களாவன: அன்பு, நாணம், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்னும் ஐந்து பண்பு களாகும்" 'அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு, ஐந்து சால்பு ஊன்றிய தூண்' - (குறள் - 983) என்றும், வகைப்படுத்திக் கூறுகிறார். புறநானூறு சுட்டிக்காட்டும் பண்பாடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழர் களின் பல்வேறு வகைப்பட்ட வாழ்க்கை வரலாற்றுக் குறிப்புகளைச் சிறப்பாகச் சுட்டிக் காட்டும் பெற்றி யினைப் பெற்ற சீரிய நூல் புறநானூறு ஆகும். தமிழ ரின் பண்பாட்டு நலச்சிறப்புக்களை ஆன்றவிந்த கொள்கைச் சான்றோரான புலவர் பெருமக்கள் பலர், தனித்தனிப் பாடல்கள் மூலம், அறிவுரைகளாகவும், அறவுரைகளாகவும், கூற்றுக்களாகவும், செய்தி களாகவும், நிகழ்ச்சிகளாகவும் புறநானூற்றில் சுட்டிக் காட்டுகின்றனர்
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/21
Appearance