16 தமிழர் பண்பாடு பற்றிப் புறநானூறு கூறும் சில கூற்றுக்களையும், செய்திகளையும்,, நிகழ்ச்சிகளையும் இங்குக் குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். கணியன் பூங்குன்றன் கணியன் பூங்குன்றன் என்ற புலவர் பெருமான் பண்டைத் தமிழர் போற்றிய பண்பாட்டைச் சில வரிகளில் தெளிவுபடுத்திக் காட்டுகிறார். எந்த ஊராயினும் அந்த ஊர் எமது ஊரே! எந்த மனிதராயினும் அந்த மனிதர் எமது உறவினரே! வாழ்தல் என்பது எப்பொழுதும் இன்பம் பயக்க வல்லது என்று எண்ணி மயங்கி மகிழ்ந்து விடவும் மாட்டோம்! அது எப்பொழுதும் துன்பந் தரத்தக்கது என்று நினைத்து மருண்டு அதனை வெறுத்தொதுக்கு தல் செய்யவும் மாட்டோம்! செல்வத்தால் பெரியவர் என்பதற்காக ஒருவரை மதித்து விடவும் மாட்டோம்! செல்வங்குறைந்த சிறியோர் என்பதற்காக ஒருவரை இகழ்ந்தொ துக்கவும் மாட்டோம்! அவரிடம் காணப் படும் பண்பாடு ஒன்றை மட்டுந்தான் மதிப்போம்!" 'யாதும் ஊரே; யாவரும் கேளிர்'. வாழ்தல் இனிது என மகிழ்ந்தன்றும் இலமே: முனிவின் இன்னாது என்றலும் இலமே! மாட்சியின் பெரியோரை வியத்தலும் இலமே! சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே! (புறம் - 192)
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/22
Appearance