உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 யக்குடுக்கை நன்கணியார் பக்குடுக்கை நன்கணியார் என்னும் புலவர், “இவ்வுலகத்தின் இயல்பை நன்கு உணர்ந்த, யாவரும், துன்பம் பயப்பனவற்றைச் சிந்தனையினின்றும் ஒதுக்கிவைக்க வேண்டும்; இன்பம் பயப்பனவற்றை மட்டும் கண்டு மகிழவேண்டும்” என்று அறிவுறுத்து கிறார். ‘இன்னாது அம்ம, இவ்வுலகம்! னிய காண்க! இதன் இயல்பு உணர்ந்தோரே!' (புறம்-194) நரிவெரூஉத் தலையார் நரிவெரூஉத் தலையார் என்னும் புலவர், "நீங்கள் நல்ல செயல்களைச் செயது முடிக்க முன்வராவிட் டாலும், தீய செயல்களைச் செய்யாமல், அவற்றி னின்றும் விலகி நில்லுங்கள்! எல்லா மக்களும் விரும்புவது அதைத்தான்! உங்களை நல்ல வழியிலே செலுத்தி. வாழுமாறு செய்வதற்கு அதுதான் ஏற்ற வழியாகத் திகழும்!" என்று அறவுரை பகருகிறார். நல்லது செய்தல் ஆற்றீர் ஆயினும், அல்லது செய்தல் ஓம்புமின்! அதுதான், எல்லாரும் உவப்பது! அன்றியும் நல்லாற்றுப் படூஉம் நெறியுமார் அதுவே! ஆவூர் மூலங்கிழார் (புறம்-195) ஆவூர் மூலங்கிழார் என்னும் புலவர், பாண்டியன் இலவந்திகைப் பள்ளித் துஞ்சிய நன்மாறன் என்னும் பாண்டிய மன்னனைப் பார்த்துப் பரிசில் பெறச்