உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 செல்கிறார். அவன் பரிசில் நல்கவில்லை என்றாலும், புலவர் அரசனிடம் பண்பாட்டை உணர்த்திவிட்டு, அவனை வாழ்த்திவிட்டும் திரும்புகிறார். அவர் அரசனைப் பார்த்து, "பொருள் கொடுக்க முடியும் என்றால் முடியும் என்றும், கொடுக்க எதுவும் இல்லை. என்றால் இல்லை என்றும் சொல்லிவிட வேண்டும். அதுதான் தாளாண்மை உடையவரின் பண்பாட்டுத். தன்மையாகும். இயலாத ஒன்றை, இயலும் என்றும், இயலக்கூடிய ஒன்றை இல்லை என்றும் கூறுதல் கூடாதாகும். அப்படிப்பட்ட செயல் இரப்போரை வருந்தச்செய்யும்; உன்னுடைய புகழைக் குறைத்து விடும். நீ என்னிடத்தில் செய்ததும் அப்படிப்பட்ட செயலாகவே ஆகிவிட்டது. என்றாலும், உன்னுடைய மகன்கள் நோயற்று வாழ்வார்களாக! நான் செல்லு' கிறேன்: உன்னுடைய வாழ்நாள் சிறப்பதாக!" என்று கூறித் தம் பண்பாட்டுப் பெருமையை நிலைநாட்டு கிறார். 'ஒல்லுவது ஒல்லும் என்றலும், யாவர்க்கும் ஒல்லாது இல்லென மறுத்தலும், இரண்டும் ஆள்வினை மருங்கின் கேண்மைப் பாலே! ஒல்லாது ஒல்லும் என்றலும், ஒல்லுவது இல்லென மறுத்தலும், இரண்டும் வல்லே! இரப்போர் வாட்டல்! அன்றியும் புரப்போர் புகழ்குறை படூஉம் வாயில் அத்தை அனைத்தாகியர்!....... அதனால் நோயிலர் ஆக நின் புதல்வர்!.. செல்வல் அத்தை; சிறக்க, நின்நாளே! (புறம் - 196