19 கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக்குமரனார் வளமும், கோனாட்டு எறிச்சலூர் மாடலன் மதுரைக் குமரனார் என்னும் புலவர், சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவனைக்கண்டு, "நாற்படை எல்லாச் செல்வமும் மிகுந்த பேரரசர் என்றாலும், எங்களை. மதிக்காத எவரையும் நாங்களும் மதிக்க மாட்டோம். வரகுச் சோறு தந்து எம்மை ஊட்டும் சிற்றூர் வேந்தராயிருந்தாலும், எங்களுடைய தகுதி அறிந்து பண்பாட்டோடு ஒழுகும் பண்புடைய வராயிருந்தால், அவரை நாங்கள் பாராட்டுவோம்! இரவலர்க்குப் பயன்படாத அறிவில்லாதவர்களின் செல்வத்தை, நாங்கள் எவ்வளவு வறுமையுற்றிருந் தாலும், நினைத்துக்கூடப் பார்க்கமாட்டோம். ஆனாலும் நல்லறிவுடையோர் வறுமையுற்றுக் காணப் பட்டாலும், நாங்கள் மிகப்பெரிதாக மதிப்போம். அவர்கள் வாழவேண்டும் என்று விரும்பி வாழ்த்து; வோம்” என்று கூறுகிறார். "மண்கெழு தானை, ஒண்பூண் வேந்தர் வெண்குடைச் செல்வம் வியத்தலோ இலமே! எம்மால் வியக்கப் படூஉ மோரே புன்புல வரகின் சொன்றியொடு, பெறூஉம் சீறூர் மன்னர் ஆயினும், எம்வயின் பாடறிந்து ஒழுகும் பண்பினோரே! மிகப்பேர் எவ்வம் உறினும், எனைத்தும் உணர்ச்சி யில்லோர் உடைமை உள்ளேம்: நல்லறிவுடையோர் நல்குரவு உள்ளுதும், பெரும! யாம், உவந்து நனி பெரிதே!” (புறம் - 197
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/25
Appearance