உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கழைதின் யானையார் 20 கழைதின் யானையார் என்னும் புலவர், கடையேழு வள்ளல்களில் ஒருவரான வல்வில் ஓரியைப் புகழ்ந்து பாடிய பாடலில், மிக உயர்ந்த பண்பாட்டு அறிவுரையை நல்குகிறார். மற்றொரு "ஒருவர், 'ஒன்றைத்தா"வென்று வரிடத்தில் இரத்தல் 'இழிவான செயலாகும்; அவ்வாறு இரந்தோர்க்கு, 'ஒன்றையும் தரமாட்டேன்' என்று மறுத்தல், மேற்குறிப்பிட்ட இழிவைக் காட்டிலும் மிகவும் இழிவான செயலாகும்; ஒருவர் தாமே விரும்பி, -"கொள்வாயாக' என் மற்றொருவரிடம் கூறுவது, உயர்ந்தவொரு செயலாகும்; அவ்வாறு கொடுப்பதைக் கொள்ளமாட்டோம்' என்று கூறுவது, மேற்சுட்டிக் காட்டியதை விட மிக உயர்ந்த ஒரு செயலாகும்! ‘ஈஎன இரத்தல் இழிந்தன்று! அதன் எதிர் ஈயேன் என்றல் அதனினும் இழிந்தன்று! கொள் எனக் கொடுத்தல் உயர்ந்தன்று! அதன் எதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று! பெருந்தலைச் சாத்தனார் (புறம் -204) பண்டைக்காலத் தமிழ்ப்புலவர்கள் வறுமையிலே வாடி உழன்றாலும், தம்முடைய தகுதியையோ, நிலை யையோ, மானத்தையோ, மதிப்பையோ இழக்க முற் படுவதில்லை. தன்மதிப்பு என்னும் பண்பாட்டினைக் காப்பாற்றுவதிலே, எப்பொழுதுமே கண்ணுங்கருத்து மாகவே இருந்து வந்திருக்கின்றனர். பெருந்தலைச் சாத்தனார் என்னும் புலவர், கடியநெடுவேட்டுவன் என்ற வேடர்கள் வேடர்கள் தலைவனான கொடையாளியைக்