உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 யில்லாமல் தரப்படும் பரிசிலை எவர்தாம் விரும்புவார், கள்? எவராயிருந்தாலும், எம்மை வருக"! என்று கூறி, எம்மை எதிர் கொண்டு வரவேற்கவேண்டும்! இப்படிப் பட்ட தகுதி படைத்த எம்மைப் போன்றவர்க்கு உலகமும் பெரிதாகத்தானிருக்கிறது. எம்மை விரும்புபவர்களும் பலராகத்தான் இருக்கிறார்கள்!" எழு இனி, நெஞ்சம்! செல்கம்! யாரோ. பருகு அன்ன வேட்கை இல்வழி, அருகில் கண்டும் அறியார் போல, அகம்நக வாரா முகன்அழி பரிசில் தாள் இலாளர் வேளார் அல்லர்! 'வருக' என வேண்டும் வரிசையோர்க்கே பெரிதே உலகம்! பேணுநர் பலரே!' (புறம் - 207) பெருஞ்சித்திரனார், தகடூரை அரசாண்டு வந்த வள்ளலான அதிகமான் நெடுமான் அஞ்சியைப் பார்க்க ஒருமுறை சென்றார். அவன் புலவரை நேரிடையாகப் பார்க்காமல், பெரும் பொருளை அவருக்குப் பரிசிலாகக்கொடுத்தனுப்புகிறான். நேரில் பார்த்துத் தகுதி-திறமையறிந்து கொடுக்காத பரிசிலைத் தாம் ஏற்றுக் கொள்ள மறுத்துப் போய் விடுகிறார். அப்பொழுது அவர் கூறிய கூற்று வருமாறு: “நான் பரிசில் பெறவேண்டி குன்றுகள், மலைகள் பலவற்றையும் கடந்து வந்தேன்! என்னை அன்புடன் பேணி ‘இப்பொருளைக் கொள்க' என்று கூறினானா? என்னுடைய திறனை எவ்வாறு அறிந்தான் இவன்? என்னை அழைத்து நேரிடையாகக் காணாமல் தந்த