23 பொருள் இது? இதனைக் கொண்டுசெல்ல நானோர் வாணிகப் பரிசிலன் அல்லன்! என் தகுதியறிந்து பரிசில் தினையளவு சிறிதாக இருந்தாலும், அதுவே எனக்குப் பெரிதும் இனிமை பயக்கும். மதிக்காமல் தரும் பரிசில் ஏற்றுக் கொள்ளக்கூடியதன்று” 'குன்றும் மலையும் பலபின் ஒழிய வந்தனென்! பரிசில் கொண்டனென் செலற்கு என நின்ற என் நயந்து அருளி, 'ஈது கொண்டு ஈங்கனம் செல்க, தான்' என என்னை யாங்கு அறிந்தனனோ, தாங்கரும் காவலன்? காணாது ஈத்த இப்பொருட்கு யானோர் வாணிகப் பரிசிலன் அல்லேன்; பேணித் தினை அனைத்து ஆயினும், இனிது அவர் துணை அளவு அறிந்து, நல்கினர் விடினே! ஆலத்தூர் கிழார் : (புறம் - 208) ஆலத்தூர் கிழார் என்னும் வேளாண் குடியின ரான புலவர், சோழன் குளமுற்றத்துத்துஞ்சிய கிள்ளி வளவன் என்ற சோழவேந்தனைக் கண்டு அறத்தாறு பற்றிக் கூறுகிறார். தமிழ்மக்களின் பண்பு நலன் களைச் சிறப்பாகச் சுட்டிக்காட்டுகிறார். “ஆவின் மடி யினை அறுத்த அறநெறி அற்றோர்க்கும், மங்கல மகளிரின் கருவினைச் சிதைத் தோர்க்கும், தம் தாய் தந்தையரைக் கொன்ற கொடுமையாளர்க்குங்கூடக் கழுவாய் உண்டு. ஆனால், உலகமே தலைகீழாக மாறினாலும், ஒருவர் செய்த நன்றியை அழிக்க முயல்பவருக்கு, உய்வே இல்லை என்று அறநூல் பாடியிருக்கின்றது”
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/29
Appearance