24 ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும், மாண் இழை மகளிர் கருச்சிதைத்தோர்க்கும், குரவர்த் தப்பிய கொடுமையோர்க்கும், வழுவாய் மருங்கின் கழுவாயும் உள என நிலம்புடை பெயர்வ தாயினும், ஒருவன் செய்தி கொன்றோர்க்கு உய்திஇல் என அறம் பாடின்றே ஆலியார் : (புறம்-34) ஆலியார் என்னும் புலவர் பண்டைத் தமிழரின் மறக்குடிப் பண்பாட்டை ஒரு செய்யுளின் மூலம் தெளிவுபடுத்துகிறார். போர்க்களத்தில் படையை: நடத்திச் செல்லும் படைத்தலைவன் படைவீரர்கள் பின் தொடர, தான் முற்படச் செல்லவேண்டும். அது தான் மறவனின் மாண்பு. மற்ற வீரர்களை முந்துறச் சொல்லிவிட்டுத், தான் பின் தங்குபவன், சிறந்த மறக்குடி மகன் ஆக மாட்டான். படை வீரர்க்கு முற்பட நின்று, முந்துறச்செல்லும் ஒரு வீரனைப் பற்றி, மற்ற வீரர்கள் புகழ்ந்துரைப்பதைப் போல், புலவர் பாடியுள்ளார். “பகைவனின் காவல் அரண்களை முற்றுகையிட்ட வனாக முனைந்து நின்று, வாய் இதழ்களை மடித்து முழக்கமிட்டுக்கொண்டு, "நீவிர் முந்திச்செல்லுவீர்” என்று எம்மை ஏவாமல், தானே முந்துபடச் செல் கின்றானே! வேந்தனே! இதுவல்லவோ அவன து. இனிய மறப்பண்பு !” 'நன்றும் இன்னான் மன்றவந்தே! இனியே நேரார் ஆரெயில் முற்றி வாய்மடித்து உரறி நீழுந்து என்னானே! (புறம்-298)
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/30
Appearance