உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரும்பிடர்த் தலையார் : 25 இரும்பிடர்த்தலையார் என்னும் புலவர் கரிகாற் சோழனின் தாய்மாமன் என்பர். அவர் பாண்டியன் கருங்கை ஒள்வாள் பெரும் பெயர் வழுதி என்ற பாண்டிய மன்னனின் அரும்பெருஞ் சிறப்புக்களைப் புகழ்ந்து பாடுகிறார். பாண்டிய மன்னனின் பாட்டுச் சிறப்பைச் சுட்டிக்காட்டும்போது, “உலகமே நிலை பிறழ்ந்தாலும், நீ உன் சொல் பண் பிறழாது போற்றும் பண்புடையவன்” என்று புகழ்கிறார். 'நிலம் பெயரினும் நின் சொல் பெயரல் (புறம்-3) உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்: என்னும் உறையூர் ஏணிச்சேரி முடமோசியார் பெரும்புலவர், ஆய்அண்டிரன் என்னும் வரையாது வழங்கும் வள்ளலைப் பல பாடல்கள் மூலம் புகழ்ந்து பாடியுள்ளார். புலவர் அறத்தின் பண்பு, நெறி யாது என்பதை ஒரு செய்யுளில் தெளிவுபடுத்திக் காட்டு கிறார். 66 இன்றைக்குச் செய்த நற்செயல் பிறிதொரு நாளைக்குத் தமக்கு உதவியாக அமையும் என்று, பின் னால் வருகின்ற ஊதியங் கருதி,அறச்செயல் புரிபவன் ஆய்அண்டிரன் அல்லன். அவனது அறம்புரியும் கைவண்மையானது, சான்றோர் எத்தகைய அறவழி யிலே சென்றனரோ, அத்தகைய அறவழியிலேயே தானும் செல்ல வேண்டும் என்ற நற்செய்கையாகிய கடப்பாட்டினை அடிப்படையாகக் கொண்டதாகும்."