உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 இம்மைச் செய்தது மறுமைக்கு ஆம் எனும் அறவிலை வணிகன் ஆஅய் அல்லன் பிறரும் சான்றோர் சென்ற நெறியென, ஆங்குப்பட்டன்று அவன் கைவண்மையே கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி :

(புறம்-134) கடலுள் மாய்ந்த இளம்பெருவழுதி பாண்டிய மன்னனாக மட்டுமல்லாமல், சிறந்த புலவனாகவும் திகழ்ந்தான். கடற்போரில் ஈடுபட்டுக் கடலில் இறந்து பட்டதன் காரணமாக அவனைக் “கடலுள் மாய்ந்த' என்ற அடைமொழி வழங்கி அழைத்தனர். அவன் பண்பாட்டில் உயர்ந்தவர்களின் பண்புநலங்களை விதந்து கூறுவதோடு, பண்பாடு மிக்க அப்படிப்பட்ட உயர்ந்தவர்களால்தான் இந்த உலகமானது உயிரோடு இயங்கிவருகிறது என்றும் வலியுறுத்திக் கூறு கிறான். இல்லையென்றால், இவ்வுலகமானது செத்த உலகமாகத்தான் இயங்கும் என்பதுஅவனது கருத்து. "இந்த உலகம் இன்னமும் உயிருடன் இருக்கிறது! என்னே வியப்பு ! இதற்குக்காரணம், தமக்கு என்று” எதையும் செய்து கொள்ளாமல், பிறருக்காகவே உழைக்கும் உண்மையான் இயல்பு உடையவர்கள் இருப்பதே யாகும் ! அத்தகையவர்கள் புகழ் பெற்றோர்க்குரிய அமுதம் கிடைப்பதாயினும், அது தமக்கு ஏற்ற இனிமையான பொருள் என்று கருதித் தாமே தனித்து உண்ணாதவர்கள்! அவர்கள் சினங் கொள்ள மாட்டார்கள்! அவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல், வாளா இருந்து, சோம்பிக்கிடந்து, தூங்கிவிடவும் மாட்டார்கள்! பிறர் எது எதற்கு