29 வருந்தலானான். மான உணர்ச்சி அவன் உள்ளத் தைப் பெரிதும் வாட்டியது. 'மானத்தை விட்டுவிட்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்வதா?, அல்லது உயிரை விட்டுவிட்டு மானத்தை நிலை நாட்டுவதா? என்ற உணர்ச்சி அவனது மனத்தை மிகவும் அலைக் கழித்தது. இறுதியில் மானவுணர்ச்சி வென்றது. இரந்து பெற்ற தண்ணீரைப் பருகாமல் அதனை வீசி எறிந்து விட்டுத்,தன் உயிரை விட்டு மானத்தை நிலை நிறுத்தினான். மானத்தை நிலை நாட்ட வேண்டும் என்ற பண்பாட்டு உணர்வை, ஒரு செய்யுளின் மூலம் அவன் உணர்த்துகிறான் தான் இறந்து படுவதற்கு. முன்பு. "மன்னர் குடியிலே குழந்தையானது இறந்து பிறந்தாலும், தசைப்பிண்டமாகவே பிறந்தாலும், அவற்றை வாளால் வெட்டிய பிறகே புதைப்பர்! நானோ பகைவர் வாளால் சாவாது போயினேன்!” சங்கிலியினால் கட்டப்பட்டு, நாய்போலத் துன்புறுத் தப்பட்டுச் சிறைப்பட்டேன்! என்னைச் சிறையில் அடைத்த பகைவரின் அருளால் வந்த தண்ணீரை, இரந்து பருகக்கூடாது என்ற மனவலிமையைக் கொள்ளாமல், வேட்கையைத் தாங்கிக்கொள்ள இய லாமல், என்னைப் போல, இரந்து உண்ணும் தன்மை யுடைய அரசரை யாரேனும் இவ்வுலகில் பெற்றெடுத்துப் போற்றுவரோ? 'குழவி இறப்பினும், ஊன்தடி பிறப்பினும், ஆள் அன்று என்று வாளின் தப்பார்; தொடர்ப்படு ஞமலியின் இடர்ப்படுத்து இரீஇய கேளல் கேளிர் வேளாண் சிறுபதம்,
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/39
Appearance