உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எல்லோரும் வாழ்த்துரைப்போம் [புலவர் இளஞ்செழியன் எம். ஏ.,] அகவையோ, அறுபத் தாறு ! ஆயினும், இளைஞர் ஏறு ! முகவரி வரைய வேண்டா முழுநிலா! தமிழ கத்தின் புகழொளி நிதிய மைச்சர் ; புலமைக்கோ சங்க மேடை ! மகரயாழ் போன்று பேசும் நாவலர் வாழ்க ! வாழ்க! நாவலர், பண்பாட் டுக்கோர் நடமாடும் தலைவர் ! ‘பாட்டுப் பாவலர் பவனி' காட்டிப் பண்பாட்டைக் காட்டி யுள்ளார்! நாவலர் காட்டு கின்ற நல்லபண் பாட்டைக் காப்போம்! 'நாவலர் வாழ்க' என்றே, எல்லோரும் வாழ்த்து ரைப்போம்.