30 மதுகை இன்றி, வயிற்றுத் தீத்தணியத், தாம் இரந்து உண்ணும் அளவை ஈன்ம ரோ, இவ் உலகத்தானே? (புறம்-74) சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் : "குள் சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன் என்பான் சோழமன்னன் ஆவான். அவன் குளமுற்றம் என்ற இடத்தில் இறந்ததன் காரணமாகக் முற்றத்துத் துஞ்சிய' என்ற அடைமொழி வழங்கப் பட்டது அவனுக்கு. அவன் ஆட்சிப் பகுதியில், சிறு குடி என்னும் சிற்றூரில் பண்ணன் என்னும் வேளாண் பெருங்குடிமகன் ஒருவன் இருந்தான். அவன், தன்னைத் தேடி வந்தார்க்கெல்லாம் சின்னஞ்சிறுவர் களாக இருந்தாலும், வயதில் பெரியவர்களாக இருந் தாலும், இரவலர்களாக இருந்தாலும்.சோறு அளித்துக் கொண்டே இருந்தான். பண்ணனின் சோறு வழங்கும் வள்ளன்மையைக் கிள்ளிவளவன் புகழ்ந்து பாராட்டு கிறான். ஒரு குடிமகனைக் கோவேந்தன் பாராட்டு கிறான் என்பது, பண்பாட்டின் உயர்ந்த நிலையைக் காட்டுவதாகும். கிள்ளிவளவன், சிறுகுடிபண்ணன் கிழானை ஒரு செய்யுள் மூலம் பாராட்டுகிறான். பண்ணனிடம் பரிசில் பெற்று வந்த பாணன் ஒருவன், பரிசில் பெறச்செல்லுகின்ற பாணனிடம் பாணனிடம் கூறுவது போல் பாராட்டு மொழி அமைந்துள்ளது. பரிசில் பெற்ற பாணன் சிறுகுடி பண்ணனை பசிப்பிணி மருத்துவன்" என்று குறிப்பிடுகிறான். -“என் வாழ்நாளையுங் கூடப்பெற்று அவன் வாழ் வானாக !” என்று வாழ்த்துகிறான்.
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/40
Appearance