உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

' 31 'யான் வாழும் நாளும் பண்ணன் வாழிய ! பசிப்பிணி மருத்துவன் இல்லம் அணித்தோ ? சேய்த்தோ ? கூறுமின், எமக்கே. நக்கீரர் : (புறம் - 173) கடைச்சங்கப் புலவர் பெருமக்களுள் நக்கீரர் தலைசிறந்த ஒருவர். மதுரைக் கணக்காயனார் என்னும் பெரும்புலவரின் மகனாவார். அவர் அறவுரையின் மூலம் பண்பாட்டுக்கொள்கையை நிலை நாட்டுகிறார். நாடாளும் அரசனானாலும், வேட்டை யாடும் கல்லாத வேடன் ஆனாலும் இருவர்க்கும் தேவைகள் ஒன்றே என்று சொல்லிவிட்டுச் செல்வம் எப்படிப் பயன்பட வேண்டும் என்பதை வலியுறுத்து கிறார். “உண்ணப்படும் பொருள் ஒவ்வொருவருக்கும் நாழி : அளவே ! உடுக்கப்படுபவை அரையாடை மேலாடை ஆகிய இரண்டே ! இவைபோலவே பிற உடல்-உள்ளத் தேவைகளும் ஒன்றாகவே இருக்கும். அதனால் செல்வத்தின் பயனாவது, அது இல்லாத வர்க்கு உவந்து கொடுத்தலே யாகும். யாமே நுகருவோம் எவரேனும் எண்ணினால், இவ்வாறு எண்ணித் தவறியவர் வாழ்வுகள் இவ்வுலகில் பலவாகும். என்று உண்பது நாழி ! உடுப்பவை இரண்டே ! பிறவும் எல்லாம் ஓரொக்கும்மே ! அதனால், செல்வத்துப் பயனே ஈதல் ! துய்ப்பேம் எனினே, தப்புந பலவே! (புறம்-189)