உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 மோசிகீரனார்: மோசிகீரனார் என்னும் புலவர், சேரமான் தகடூர் எறிந்த பெருஞ்சேரல் இரும்பொறை என்னும் சேர மன்னன் முரசுக்கட்டிலில் அறியாது படுத்துறங்கிய தம்மை, வெட்டி வீழ்த்தாது, தாம் ஒரு தமிழ்ப்புலவர் என்ற காரணத்தால், கவரிகொண்டு மெல்லிய காற்றுப்பட வீசி மரியாதை காட்டிய பண்பாட்டைப் பெரிதும் வியந்து கூறுகிறார். "மென்மையான முரசு வைக்கும் படுக்கையில் அறியாது ஏறிப்படுத்துறங்கிய என்னை இருகூறாக வெட்டாது நின் வாளைக் கீழே போட்டாய் ! நீ தமிழை முழுவதும் அறிந்ததால், தமிழறிந்தாரை மதிக்கும் மாண்பினையுடையாய் என்பதற்கு இதுவே போது மானது." மென்பூஞ்சேக்கை அறியாது ஏறிய என்னைத் தெறுவர, இருபாற் படுக்கும் நின் வாள்வாய் ஒழித்ததை! அதூ உஞ்சாலும் நற்றமிழ் முழுது அறிதல்4 (புறம்-50) தமிழர் போற்றிய பண்பாட்டின் சிறப்பையும், மேன்மைகளையும் உணர்த்த ஒரு சில எடுத்துக் காட்டுக்கள் மட்டுமே புற நானூற்றிலிருந்து இங்குக் காட்டப்பட்டுள்ளன. தமிழ் இலக்கியங்கள் அனைத் தையும் துருவித்துருவி ஆராய்ந்தால், எண்ணிறந்த எடுத்துக்காட்டுக்களைக் கண்டுகண்டு இறும்பூ தெய்தலாம். ☐