பண்பாடு போற்றுவோம். (டாக்டர் நாவலர் இரா. நெடுஞ்செழியன், எம். ஏ., டி. லிட்,) தர "பண்பு எனப்படுவது பாடு அறிந்து ஒழுகல்" என்று யண்பு என்னும் சொல்லுக்குப் பொருள் விளக்கம்' வந்த கலித்தொகைச் செய்யுள் ஒன்று, அதனைக் தெள்ளத் தெளிவாகத் தெளிவுபடுத்திக் காட்டுகிறது. மக்களின் சமூக வாழ்க்கையில், பாங்கு அறிந்து ஒழுகும் தன்மையை, அதாவது பாடு அறிந்து ஒழுகும் தன்மையைப் பண்பு' என்று குறிப்பிட்டனர் தமிழ்ச் சான்றோர். எனவேதான், பண்போடு கூடிய பாங்கான ஒழுக்கத்தைப், பண்பாடு' என்றனர். 'விடுதல்' என்ற சொல் 'வீடு' என்று ஆவதைப் போல, 'சுடுதல்' என்ற சொல் 'சூடு' என்று ஆவதைப் போல, 'கெடுதல்' என்பது 'கேடு' என்று ஆவதைப் போல, ‘படுதல்' என்பது 'பாடு' என்று ஆகிறது. ‘படுதல்' என்ற சொல் ஆகுதல்-தோன்றுதல்-புலப் படுத்துதல்-பொருந்துதல் போன்ற பொருள்களை உணர்த்துவதாகும். எனவேதான், பண்பினைப் புலப் படுத்துகின்ற ஒன்றைப் 'பண்பாடு' என்கிறோம். 'பண்படுதல்' அல்லது பண்படுத்துதல்' என்பது செம்மையான-சீர் பெற்ற - சிறந்த-உயர்ந்த- மேம்பட்ட-அழகான - அருமையான-நலன் பெற்ற- ய்யன் பெற்ற-உறுதியான ஒரு நிலையை உணர்த்து
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/5
Appearance