4 பண்பட்ட இனம்- வதாகும். இதுகாரணம் பற்றித்தான், நிலம் - பண்பட்ட உள்ளம்-பண்பட்ட பண்பட்ட மொழி - பண்பட்ட துறை-பண்பட்ட மனிதன் என்பன போன்ற சொற்றொடர்களைப் பயன்படுத்துகிறோம். கலை-பண்பட்ட புன்செய் நிலத்தைப் பண்படுத்திப் பண்படுத்தி நன்செய் நிலமாக்குவதைப் போல, வறண்ட பகுதி களைப் பண்படுத்திப் பண்படுத்தி வளமான நிலமாக்கு. வதைப் போல, வெள்ளைக் கல்லைப் பண்படுத்திப் பண்படுத்தி (பட்டை தீட்டிப் பட்டை தீட்டி) வைரமாக்குவதைப் போல, பாழ்பட்ட உள்ளத்தைப் பண்படுத்திப் பண்படுத்திப் பண்பட்ட உள்ளத்தைப்: பெற முடிகிறது. பண்பாடும் நாகரிகமும் உள்ளத்தைப் பண்படுத்தப் பயன்படும் கருவி பண்பாடேயாகும். மனிதனின் அகத்தோற்றப் பொலிவை வெளிப்படுத்திக் காட்டுவதும் பண்பாடே. யாகும். மனிதனின் அகத்தோற்றத்தின் செம்மை யைப் புலப்படுத்துவது எப்படிப் பண்பாடோ (CULTURE) அதுபோன்றே மனிதனின் புறத்தோற்றத், தின் செம்மையைப் புலப்படுத்துவது நாகரிகம். (CIVILIZATION) என்று அழைக்கப்படும். நாகரிகம் என்னும் சொல் பண்டைய காலத்தில் பண்பாட்டை உணர்த்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வந்தது. என்றாலும், இற்றைக் காலத்தில்,“CULTURE" என்னும் ஆங்கிலச் சொல் எதனைக் குறிக்கப் பயன்படுத்தப். படுகிறதோ, அதனைக் குறிக்கத் தமிழில் ‘பண்பாடு' என்னும் சொல்லும்,"CIVILIZATION' என்னும் ஆங்கிலச் சொல் எதனை உணர்த்தப்பயன்படுத்தப்படுகிறதோ,
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/6
Appearance