5 அதனை உணர்த்தத் தமிழில் 'நாகரிகம்' என்னும் சொல்லும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. கூடிய எனவே பண்பு - பண்பாடு போன்றவை மனிதனின் உள்ள நிகழ்வுகளைக் குறிப்பனவாகும். மேலும் அவை மனிதனோடு மட்டுமே தொடர்புபடுத்திச் சொல்லக் தன்மையனவாகும். விலங்கினம் -பறவை யினம்- ஊர்வன-நீந்துவன—புழு-பூச்சி- பொட்டு போன்றவைகளுக்கு உள்ளம் இல்லை. அவற்றினிடத்தில் பண்பையோ, பண்பாட்டையோ எதிர்பார்க்க இயலாது. அவற்றினிடத்தில் உள்ளது சிறத்தல் (EVOLUTION) வழிவந்த சில இயல்புகள், சில பழக்கவழக்கங்கள், சில ஆற்றல்கள் இருக்கக் கூடும். ஆனால் அவற்றினிடத்தில் பண்பு நலத்தை யோ அல்லது பண்பாட்டுச் செம்மையையோ யாரும் எதிர்பார்க்கமாட்டார்கள். அவற்றின் தன்மை 21 களைப் பற்றி அளவிடும்போது- பசு எவ்வளவு பால் கறக்கும் ? காளை எத்துணைப் பல்போட்டிருக்கிறது? குதிரை எவ்வளவு விரைவாக ஓடும்? கழுதை எவ்வளவு பொதி சுமக்கும் ? ? யானை‘என்ன வலிவு பெற்றிருக்கிறது? ஆட்டினிடம் ஊன் எவ்வளவு கிடைக்கும் ? கோழியின் எடை என்ன ? என்ற முறையில்தான் அளவிடுவோமேயல்லாமல்-
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/7
Appearance