அவர் எவ்வளவு எடை உள்ளவர் ? எத்துணைப்பற்களை உடையவர்? விலங்குகளைப்பற்றிக் என்று கேட்கமாட்டோம். மனத்தின் இயல்பு கேட்பதைப்போலக் எதையும் அறிவால் ஆராய்ந்து, உள்ளத்தால் உணர்ந்து, பண்பை வெளிப்படுத்தும் பாங்கு மனிதனுக்கு மட்டுமே உண்டு. உள்ளம் - அகம்- மனம்-சித்தம் -சிந்தை-நெஞ்சம்-இதயம் போன்ற சொற்களை, மனிதனின் அகத்தோற்ற நிலைகளைப் புலப்படுத்தப் பயன்படுத்துகிறோம். இந்தச் சொற் களையெல்லாம், ‘மனம்' என்று ஒரு பொருளைக் குறிக்கும் பல சொற்களாக, இன்றைய நிலையில், நாம் பயன்படுத்தி வந்தாலும், பண்டைக்காலத்தில், தமிழ்ப் பெரும் புலவர்கள், மனத்தின் வெவ்வேறு நிலைகளைக் குறிப்பாகவும், திட்டவட்டமாகவும், தெளிவாகவும் -உணர்த்தப் பயன்படுத்தி வந்துள்ளனர். மனம் என்பது மனிதனுக்கு மட்டுமே அமைந்த காரணத்தால், 'மனத்தன்' என்று பெயர் பெற்று, நாளடைவில் ‘மனிதன்' என்று அழைக்கப்பட்டான் என்றும், ‘மனிதன்’ என்னும் தமிழ்ச்சொல்லே 'மனுஷன்' என்று வடமொழியில் திரிந்து நின்றது என்றும் ஆராய்ச்சியாளர் கூறுவர். மனம் மனிதனுக்கு மட்டுமே உண்டு என்பதைத் திருநாவுக்கரசர் ஓரிடத்தில் உணர்த்துகிறார். அவர், தாம் வழிபடும் கற்பனைக்கடவுளை நினைந்து வரம்
பக்கம்:பண்பாடு போற்றுவோம் 1985.pdf/9
Appearance