பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

வண்மை இல்லையோர்

வறுமை இன்மையால்'

என்பான். 'கொள்வாரிலாமையால் கொடுப்பார்களும் இல்லை மாதோ' என்பது அறியத் தக்கது. ஆதலால் இங்கு ஈகைக்கு இடமில்லை என்று கருதுதல் கூடாது. தசரதனின் சிறப்பைக் கூறும் கவிஞன்,

ஈந்தே கடந்தான்

இரப்போர்க்கடல்"

என்டான்.

மாவலியின் வரலாற்றை விசுவாமித்திரன்

இராமலக்குமணர்கட்குக் கூறுங்கால் ஈகை பற்றிய குறிப்பு வருகின்றது. மாவலி உதாரகுணமுடையவன் என்பதை,

வேண்டினர் வேட்கையின் மேற்பட விசி நீண்டகை யாய் இனி நின்னுழைலுந்தோர் மாண்டவர்; அல்லவர் மாண்பிலர்'

என்ற வாமனன் வாக்கால் அறியலாம். வாமனனுக்கு "மூவடிமண்” தர ஒப்புக் கொள்ளுகின்றான் மாவலி. உடனே அவன் குலகுருவான சுக்கிரன் “உலகம் உண்ட பெரு வாயனே ஆலமர் வித்தின் அருங்குறளாக' வந்துள்ளவன்' என்று கூறித் தடுக்கின்றான். அதற்கு மாவலி, "யாவரினும் சிறந்த திருமாலே தனது பெருமையனைத்தை யும் இழந்து சிறு யாசகனாய் என்னிடம் வந்து ஒரு பொருளைத் தருமாறு வேண்டுவானானால் அவனுக்கு அதனைக் கொடுத்துப் பெருமை பெறுதலினும் மிக்க சிறப்பு வேறொன்று உள்ளதோ? இதில் என்கை உயர்ந்து, அவன்

55. பாலகா, நாட்டுப் - 53 58. மேற்படி. அரசியல் - 5 57. மேற்படி. வேள்வி - 24