பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

மேலே மாவலியின் வாய்மொழியாக ஈவோரின் சிறப்பைக் கூறிய கவிஞன், கொடுப்பதைத் தடுப்பதன் கொடுமையையும் கூறுவான். ஒருவருக்கு மற்றொருவர் கொடுப்பதை இடையிலேயிருந்து தடுப்பவர், அக் கொடுப்பவரை கொடாமையாலாகிய பாவத்துக்கு இலக்காக்குவர்; அன்றித் தாமும் தானம் விலக்கிய பாவத்தின் மிகுதியால் கெட்டழிவர்" வெளிப்படையாக்த் தீங்கு செய்பவரால் நேர்கிற துன்பத்தினின்றும் தப்புதல் எளிது; உடனின்று கெடுக்கின்ற அனுகூலப் பகைவர் களாகின்ற துன்பத்தினின்றும் தப்புதல் அரிது. ஈவது விலக்கேல்" என்றார் ஒளவைப் பாட்டியும்,

அழுகாறு உடையார்க்கு அதுவே.சாலும் ஒன்னார் வழுக்கியும் கேடீன் பது (195)

என்று வள்ளுவர் பெருமானும் கூறியிருப்பவற்றை ஈண்டுச் சிந்தித்தல் தகும்.

கொடுப்பதை விலக்குகின்றவர்களைக் கொடையாளி கட்குப் பகைவர் என்று கூறிய கவிஞன், அவர் கொடுக்கும் போது உலோபகுணத்தை விடக்கூடாது என்று உபதேசித்து அக் கொடுத்தலுக்குத் தடைசெய்பவர்கள் உட்பகைவர்கள் ஆவர். இங்ங்னம் இதுகாறும் சுக்கிரனைப் படர்க்கையாகக் கொண்டு கூறிய கவிஞன், இப்போது முன்னிலைப் படுத்திக் கூறுவான். "கொடையாளி ஒருவன் இரவலனுக்கு ஒரு பொருளை எடுத்துக் கொடுப்பதன் முன்னம் தடைசெய்யும் குருவாகிய உங்கட்கு அழகன்று. இக்கொடுஞ்செயலின் பயனால் உமது சுற்றம் உடுக்க உடையும் உண்ண உணவும் இல்லாதபடி ஆய்வீர்” என்கின்றான் மாவலி, இதில்,

61. பாலகா, வேள்வி - 31 52. ஆத்திசூடி - 4