பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 5 ||

நம்பிக்கைகள்

"மானிடப் பிறப்பு கிடைத்தற்கரியது; இந்தப் பிறப்பிலும் கூன், குருடு, பேடு நீங்கிப் பிறத்தல் அரிது. இப்படிப் பிறந்தாலும் ஞானமும், கல்வியும் பெற்று வாழ்தல் அதனினும் அரிது”. இப்படி ஒரு நம்பிக்கை; நம்முன்னோர் கொண்டு வழிவழியாக வந்து கொண்டிருக்கும் நம்பிக்கை நம் பிறப்பு வட்டங்களை மணிவாசகப் பெருமான்,

புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப் பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகி கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய் வல்லகர ராகி முனிவராய்த் தேவராய்ச் செல்லாஅ நின்றஇத் தாவர சங்கமத்துள் எல்லாம் பிற்ப்பும் பிறந்திழைத்தேன்' என்று அருளிச் செய்கின்றார். உயிர் வகைகளையும் ஒரறிவு உயிர்முதல் ஆறறிவு வரை வகைப் படுத்தி விளக்கும் மரபு பண்டைய இலக்கணமாகிய தொல்காப்பியத்திலேயே காணக்கிடக்கின்றது. வழிவழியாக வரும் இத்தகைய நம்பிக்கைகள் மக்கட் பண்பாட்டின் ஒரு பகுதியாகும். இவை காவியங்களில் இடம் பெறுகின்றன.

1. திருவன. சிவபுரா. அடி 25-31