பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் tர்:

மணிமேகலையிலும் சாபத்தைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. இச்சாபம் காயசண்டிகைக்கு ஏற்பட்டது, வடதிசையில் விஞ்சையர் உலகிலுள்ள காஞ்சனபுரம் என்ற ஊரைச் சேர்ந்தவள் காயசண்டிகை. இவள் தன் கணவனுடன் தென்திசையிலுள்ள பொதிய மலையின் வளங்களைக் காண்டற்கு வருகின்றாள், வழியில்கான்யாறு ஒன்றின் கரையிலிருக்கையில், விருச்சிகன் என்னும் முனிவன் ஒருவன் பாரணம் செய்வதற்குப் பனங்கணி போன்ற பருத்த நாவற்கனியொன்றைத் தேக்கிலையில் வைத்துவிட்டு நீராடச் செல்லுகின்றான். அக்கனியின் இயல்பினை அறியாத காயசண்டிகை அதனைக் காலால் சிதைத்துக் கெடுத்தாள். நீராடி மீண்டு வந்த முனிவன் அக்கனி தன்னால் சிதைந்தமையை அறிந்து சினந்து காய சண்டிகையை நோக்கி, "நங்காய், இக்கணி தெய்வத்தன்மை யுடையது. பன்னிரண்டு ஆண்டுகட்கு ஒருமுறை ஒரே கனியைத் தருவது இந்நாவல் மரம். இதனை உண்டோர் பன்னிரண்டு ஆண்டு பசி ஒழிந்திருப்பர். யான் பன்னிரண்டு ஆண்டு பட்டினியிருந்து ஒருநாள் உண்ணும் நோன்புடையேன். நான் உண்ணும் நாள் இந்நாளே. உண்ணக் கருதிய கனியும் இக்கனியே; இதனை நீ அழித்து விட்டாய்; ஆதலால் நீ வான்வழியே செல்லும் மந்திரத்தை மறப்பாய். யானைத் தீ என்னும் நோயால் பன்னிரண்டு ஆண்டு தீராப் பசிகொண்டு உழல்வாய்; பின்னர் இக்கனியை நான் உண்ணும் நாளில் பசியொழியப் பெறுவாய்” என்று சாபம் அளித்து சாபவிடையும் தந்து போயினன். இந்தப் பசி நோய் மணிமேகலை தன் அமுதசுரபியிலுள்ள ஒரு பிடிசோற்றால் தீர்ந்தது'

4. மணிமேகலை - உலக அறவி புக்க காதை காண்க.