பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை ஒ 3

நாளடைவில் 'கம்பன்' என்றாயிற்று என்றும் விளக்கம் கூறி சமாதானப்படுத்துவர். கதிரவன் தோன்றுதலையும். அவனது கதிர்கள் விரிதலையும் வருணிக்கும் இரண்டு பாடல்கள் சைவர்கட்கு மிக்க மகிழ்ச்சியைத் தரும். சிதையுமனத் திடருடைய செங்கமலம்

முகமலரச் செய்ய வெய்யோன் புதையிருளின் எழுகின்ற புகர்முகயா

னையின் உரிவைப் போர்வை போர்த்த உதயகிரி எனும்கடவுள் நுதல்கிழித்த

விழியேபோல் உதயம் செய்தான். என்பது கதிரவன் தோற்றத்தின் வருணனை, "கொழுநனாகிய தன்னைப் பிரியப் பெற்றதனால் தன் நெஞ்சத்தில் சோகமுடைய செந்தாமரை மலர்களாகிய தன் மனைவிமாரது முகங்கள் தான் வந்து கூடப் பெற்றதனால் ஏற்பட்ட மகிழ்ச்சியினால் மலர்ச்சியைப் பெறும்படி, யானைத் தோலைப் போர்வையாகத் தரித்துள்ள உதய பர்வதமாகிய உருத்திர மூர்த்தியின் நெற்றியினின்று தோன்றிய நெருப்புக்கண்போல் உதயம் செய்தான்” என்ற பாடலின் கருத்தை அநுபவித்து மகிழ்கின்றனர். எண்ணரிய மறையினொடும் கின்னரர்கள்

இசைபாட உலகம் ஏத்த விண்ணவரும் முனிவர்களும் வேதியரும்

கரம்குவிப்ப வேலை என்னும் மண்ணுமணி முழவு.அதிர வானரங்கில்

நடம்புரிவான் இரவி யான கண்ணுதல்வா னவன்கனகச் சடைவிரித்தால்

எனவிரிந்த கதிர்கள் எல்லாம்.

6. பாலகா. மிதிலைக் - 150. 7. மேற்படி - 153