பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

108 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

நோக்கிச் சென்று கொண்டிருந்த அவனது காமக் கிழத்தியான புஞ்சிகஸ்தலையைக் காண்கின்றான். கண்டவன் அவள்மீது காமுற்று அவளை வலியப் பிடித்துக் கற்பளிக்க, அவள் வருந்திச் சினந்து "நீ எந்த மகளிரையேனும் அவர் உடன் பாடின்றி வலியத் தீண்டின் அவர்களது கற்பின் கனலால் எரித்தழிவாய்' என்று வைதாள். இச்செய்தியை அறிந்த நளகூபரனும், இனி, இராவணன் ஒருவருக்கு உரிய மாதரை வலியத் தீண்டு வானாயின், தலை வெடித்து இறக்கக்கடவன் என்று சபித்தான்.

2. ஊழ்பற்றிய நம்பிக்கை, ஊழைச் சாதாரண மக்கள் தலைவிதி என்று வழங்குவர். பாமரர் முதல் படித்தவர் வரை இதில் நம்பிக்கை கொண்டிருந்தனர். இதற்கு இலக்கியங்களில் நிறையச் சான்றுகள் உள்ளன. புறநானூற்றில் உள்ள 'யாதும் ஊரே (புறம் - 192) என்ற கணியன் பூங்குன்றனார் பாட்டில் இக்குறிப்பு வருகின்றது.

தீதும் நன்றும் பிறர்தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோ ரன்ன சாதலும் புதுவ தன்றே

கல்பொருது இரங்கும் மல்லல் பேர்யாற்று நீரவழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே

என்ற பாடற் பகுதியில் இதனைக் கண்டு மகிழலாம்.

திருக்குறளில் ஊழ் பற்றி ஒருதனி அதிகாரமே உண்டு. பத்துக் குறட்பாக்களில் இக்கருத்துகள் தெளிவாக விளக்கப்பெறுகின்றன. மக்கள் மனம் கொண்டு வாழும்