பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பிக்கைகள் $ 109

வாழ்க்கையில் நிகழும் எழுச்சி - வீழ்ச்சி, உயர்வு - தாழ்வு, ஆக்கம் - கேடு, நன்மை - தீமை, உடைமை - வறுமை, இன்பம் - துன்பம் முதலிய பலவும், ஏதோ ஒருவகை ஒழுங்கு முறைக்கு உட்பட்டே அமைந்து நடைபெற்று வருகின்றன. இந்த ஒழுங்கான ஆட்சி முறையை ஆராய்ந்து அறிவது அருமை; ஆனால் அவை உண்டு என்று உணர்வது எளிது. இத்தகைய ஆட்சி முறையைத்தான் நம் முன்னோர் 'ஊழ் என்று குறித்துப் போந்தனர்.

மனித வாழ்க்கையைக் கூர்ந்து நோக்கினால் ஒரு பேருண்மை புலனாகும். செல்வம் சேர்தல், நுகர்தல் முதலிய புற வாழ்க்கைப் பகுதிகளில் ஊழ் தலையிடுவது போல், அறிவு, ஒழுக்கம், அடக்கம், அவாவின்மை முதலிய நற்பண்புகளைப் பெறும் அகவாழ்க்கைப் பகுதிகளில் ஊழ் தலையிடுவதில்லை. புற வாழ்க்கைப் பகுதியில் ஊழின் துணை இருந்தாலன்றி நினைத்தவாறு பெற முடியாது. அகவாழ்க்கைப் பகுதியில் ஊழ் அவரவர்க்கு உரிமை கொடுத்துள்ளது. ஆக வாழ்க்கையில் வேண்டிய வேண்டியாங்கு என்று (குறள் 255 வள்ளுவப் பெருமான் கூறியுள்ளது உண்மையாகும்.

இந்தப் பூவுலகில் இதுகாறும் அறிவுடையவராக விரும்பி முயன்றவர் அறிவு பெறாமல் இருந்ததில்லை; அடக்க உடையவராக வாழமுயன்றவர் அதைப் பெறாததும் இல்லை; ஒழுக்கத்தைப் போற்றி வாழ முயன்றவர் விரும்பியவாறு அதைப் பெறத் தவறியதும் இல்லை; அவா அறுக்க வேண்டும் என்று உண்மையாக முயன்றவர் முயற்சியின் பயனைப் பெறாததும் இல்லை; இவ்வாறே மற்ற நற்பண்புகளை விரும்பிப் பாடு பட்டவர்கள் அவ்வவற்றை அடைந்து முன்னேறியுள்ளதை நாம்காணத்தான் செய்கின்றோம், ஆனால் செல்வம் பெறவேண்டும் என்று.விரும்பிப். பாடுபட்ட எல்லோரும்