பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

என்பது கதிரவனின் கதிர்கள் விரிவதை விளக்குவது. அளவிடுதற்கு அரிய வேதங்களுடன் கின்னரர்கள் இசைபாடுகின்றதாக உலகிலுள்ள உயர்ந்தோர் யாவரும் துதிக்கின்றனர். தேவர்கள், முனிவர்கள், அந்தணர்கள் கைகூப்பி வணங்குகின்றனர். கடல் என்கின்ற அழகிய மத்தளம் ஒலிக்கின்றது. இந்தச் சூழ்நிலையில் ஆகாயமாகின்ற நடன . அரங்கில் நடனம் செய்கின்ற ஒளியையுடைய கதிரவனாகிய நெருப்புக் கண்களை நெற்றியிலுடைய உருத்திர தேவனுடைய பொன்னிறமான சடைகள் பரந்து விளங்கினாற்போல கதிர்கள் யாவும் எங்ககும் பரவின என்று கூறி மகிழ்கின்றனர்.

சமரசவாதிகள் தங்கள் கருத்திற்கு இசைய பாடல்களைத் தேடுகின்றார்கள். கம்பனின் கவிதைச் சுரங்கத்தில் இரண்டு பாடல்கள் கிடைக்கின்றன. மூலபலத்துடன் வந்த இராவணனோடு நிகழ்த்திய இறுதிப் போர் நிறைவு எய்திய நிலையில் தேவர்கள் துதிக்க நின்ற இராமனது தோற்றத்தைக் காட்டுகின்றான் கம்பநாடன். ஒருபாடல்:

தீமொய்த்த அனைய செங்கண்

அரக்கரை முழுதும் சிந்திப் பூமொய்த்த கரத்த ராகி

விண்ணவர் போற்ற நின்றான் பேய்மொய்த்து நரிகள் ஈண்டிப்

பெரும்பினம் பிறங்கித் தோன்றும் ஈமத்துள் தமியன் நின்ற

கறைமிடற்று இறைவன் ஒத்தான்." உலகம் அழிந்த காலத்தில் பேய்க் கூட்டங்கள் மொய்த்து நிற்கவும், நரிகள் நெருங்கி ஓடவும் பிணங்கள் விளங்கித்

3. யுத்த மூலபலம். 231