பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

112 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

கருமத்தை மேன்மேலும் காண்போம்; இன்று

கட்டுண்டோம் பொறுத்திருலிபோம் காலம்

மாறும் தருமத்தை அப்போது வெல்லக் காண்போழ் தனுஉண்டு காண்டியம் அதன்பேர்"

என்று விதியின் சதியையும் 'அறம் வெல்லும்; பாவம் தோற்கும் என்ற உண்மையையும் உரைப்பான்.

இந்த ஊழ்பற்றிய நம்பிக்கை கம்பன் காவியத்தில் பொதிந்திருக்கும் ஓரிரு இடங்களைக் காட்டுவேன். இலக்குவன் இராமனுடன் கானகம் வருவதாக வற்புறுத்திச் சொன்னபோது இராமன் ஒன்றும் பேசாதவனாகி தம்பியின் வதனத்தை நோக்கிக் கண்ணிர் பெருக்கி நிற்கின்றான். அப்போது வசிட்டன் வருகின்றான். இரண்டு அரச குமாரர்களும் சென்னிதாழ்த்தி வணங்குகின்றனர். அப்போது வசிட்டன் கருதுவது: “மணிமுடி சூடி வாழ்வதற்குரிய நன்னாளில் தீவினைவந்து சேர, பீதாம்பரம் அணிதலை யொழிந்து மரவுரியைத் தரித்தான்; விதிக்கடவுளாகிய நான்முகன்ே சூழ்ந்திட்டாலும், தீவினை யாகிய ஊழ்வினை செய்தவனையே சென்றடையக் கூடியதாதலால், அதனை ஒருவராலும் நீக்குதற்குரிய தன்மையை உடையதோ? கானகத்திற்குச் செல்லுவதாகிய இச்செயல் கைகேயியால் மாத்திரம் விளைந்ததன்று. புண்ணிய மூர்த்தியாகிய இராமனிடத்தில் அடைதற்குரிய தன்மை உடையதும் அன்று. எவ்வினையினால் ಶ್ಲೆಸ್ತ್ರ எவருடைய ಖtಾಡಿ!ು? ೨೯Tಣ್ಣ ஒருவழியாக செவ்விதின் புலனாகும்” என்கின்றான்' தேவர்களின் சூழ்ச்சியால் இது நிகழ்ந்தது' எனப் பின்னர் விளங்கும் என்பது வசிட்டனின் உட்கோள் ஈண்டு ஊழ் பற்றிய நம்பிக்கை புலனாகின்றது.

14. மேற்படி - 283 15. அயோத்தி - நகர்நீங்கு - 164, 165