பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 113

சூழ்வினை நான்முகத் தொருவன் சூழினும் ஊழ்வினை ஒருவரால் ஒழிக்கற் பால்தேர்?" என்ற வசிட்டன் வாக்கு வள்ளுவப் பெருந்தகையின் ஊழிற் பெருவலி யாவுள ? முற்றொன்று சூழினினும் தான்முந் துறும்" 380) என்ற வாக்குடன் ஒப்பிடத் தக்கதாக அமைகின்றது. வள்ளுவனின் தாக்கத்தைக் கம்பன் காவியத்தில் பல இடங்களில் கண்டு மகிழலாம்.

சிற்றன்னையால் தனக்கு வழங்கப்பெற்ற இரு வரங்களின் பலத்தில் இராமனுக்கு நேரிட்ட 'வனவாசத்தைப்பற்றிக் கேள்வியுறுகின்றான், இலக்குவன். 'மூட்டாத காலக் கடைத் தீயென மூன்றெழுகின்றான் (15. 'உள் நிற்கும் உயிர்ப்பெனும் ஊதை பிறங்கநின்ற, அண்ணற் பெரியோன் தனது ஆதியின் மூர்த்தியொக்கின்றான் (15. கைகேயியின் செயலை சிங்கக்குருளைக்கு இடு தீஞ்சுவை ஊனை நாயின், வெங்கட் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே (17) என்று இகழ்ந்து போர்க்கோலம் பூண்டு நிற்கின்றான். இதனைக் காட்டும் வருணனையும், வீரமொழிகளும் படித்துப் படித்து மகிழத்தக்கவை."

இலக்குவனின் நாண்உரும் ஏறு தொலைவில் இருந்த இராமனின் செவியில் கேட்கின்றது. வருகின்றான் இராமன். எப்படி வருகின்றான்?

வீறாக்கிய பொற்கலன் வில்லிட

ஆரம் மின்ன 16. மேற்படி - 164 17. திருக். அறம் - ஊ-10. 18. அயோத்தி - நகர் நீங்கு 118-122