பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 117

மாரீசனும் "மாயமான் ஆயினான்; மாய மான் ஆயினான்” (கிட்கிந்நட்புக்கோள்-1). விதி யாரை விட்டது? சுபாகு இராமன் கணையால் முன்னர் மாய்ந்தான். அப்போது தப்பிய மாரீசன் இப்போது இராகவன். கனைக்கு இரையாகின்றான். இராவணன் வாளுக்கு இரையாவதை விட இராமன் கணைக்கு இரையாவது மேல் என்று வந்தவன் இவன்.

&Lssus: இராமலக்குமணர்கள், மாய மான் மாண்டபிறகு, பர்னசாலையை நோக்கி விரைந்து வரும் போது, சீதை அங்கில்லை. தேர்ச்சுவட்டின் வழியே வந்தனர். வீணைக் கொடி ஒன்று தரையில் கிடந்ததைக் கான்கின்றனர். தொடர்ந்து வரும்போது முறிந்த வில், சூலம், அம்பறாத்துணிகள், கவசம், குண்டலங்கள், பல அணிகள் முதலியவை தென்பட்டன. இறுதியாக சடாயு விழுந்து கிடத்தலைக் கண்டனர். இராமன் பலவாறு புலம்புகின்றான். இந்நிலையில் சடாயு மூர்ச்சை தெளிந்து, அரச குமாரர்களை அருகில் அழைத்து,

பாக்கியத்தால் இன்றுஎன் பயனில் பழியாக்கை போக்குகின்றேன் கண்ணுற்றேன் புண்ணியரே

வம்மின்என்று தாக்கி யரக்கன் மகுடத் தலைதுமித்த

& & & • r > , 25 மூக்கி னால்உச்சி முறைமுறையே மோக்கின்றன். பின் சடாயு தேறுதல்மொழி கூறுகின்றான்: வாழ்க்கையின் இன்ப துன்பங்கள் ஊழ்வினை வசத்தான வாயுள்ளன. இதனை ஏற்றுக் கொள்ளாவிடில் மதிவழியால் விதியை வெல்ல முடியுமோ? துன்பம் வந்து சேரும்போது மனத்தைத் தவிக்க விடுவது பேதையின் செயல். நான்முகன் தலை (ஐந்தாவது தலை) அறுந்தது ஊழ்வினையாலன்றோ?

25. ஆரணிய சடாயு உயிர்நீத்த - 189