பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 121

'குடியாட்சி என்ற கருத்து முகிழ்த்து நிலைபெற்று விட்டது. இதுவே மக்கள் பண்பாடாகவே மலர்ந்து விட்டது. பண்டைக் காலத்தில் தமிழ் நாட்டில் அரசோச்சிய சேரன் செங்குட்டுவன்,

மழைவளம் கரப்பின் வான்பே ரச்சம் பிழையுயி ரெய்தின் பெரும்பே ரச்சம் குடிபுர வுண்டும் கொடுங்கோ லஞ்சி மன்பதைக் காக்கும் நன்குடி பிறுத்தல் துன்ப மல்லது தொழுதகவு இல்'.

என்று தன் பொறுப்பை உணர்ந்ததுபோல் எத்துணைப் பேர் உணரமுடியும்? மன்னர்கள் தம் கடமைகளை உணராமல் உரிமையை நிலைநட்ட முயன்ற பொழுதுதான் 'குடியாட்சி என்ற வித்து இந்த மானிலத்தில் ஊன்றப் பெற்றது. பண்டைய அரசர்கள் தம் பொறுப்புகளையும் கடமைகளையும் பெரிதும் உணர்ந்திருந்தமையால் புறநானூற்றுப் புலவர் ஒருவர்,

நெல்லும் உயிரன்றே நீரும் உயிரன்றே மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்

என்று பாடினார். மன்னன்தான் நாட்டின் உயிர் என்று அக்காலக் கொள்கையை வெளியிட்டார்.

காலப் போக்கில் மக்கள் குரலுக்கு மதிப்பு ஏற்பட்டது. பன்னிரண்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த கம்பன் மக்கள் குரலுக்கு மதிப்பு இருந்ததை,

வையம் மன்னுயி ராகஅம் மன்னுயிர் உய்யத் தாங்கும் உடல்அன்ன மன்னவன் 32. சிலப். காட்சிக். அடி - 100-104 33. புறம் - 186. 34. அயோத் மந்தரை - 17

34