பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

என்ற அடிகளில் காட்டினான். மாநிலத்தில் வாழும் மக்களை உயிராக்கி மன்னனை அவ்வுயிரைத் தாங்கும் உடலாகக் காட்டுவான். பிறிதோரிடத்தில் தசரதன் நாட்டைப் பாதுகாத்தமையைக் கூறவந்த கவிஞன்,

வயிரவான் பூன்அணி மடங்கல் மொய்ம்பினான் உயிரெலாம் தன்னுயிர் ஒப்ப ஓம்பலால் செயிரிலா உலகினில் சென்று நின்றுவாழ் உயிரெலாம் உறைவதோர் உடம்பும் ஆயினான்".

என்று காட்டுவான். இதிலும் அரசனை உடலாகவும் மக்களை உயிராகவும் காட்டியுள்ளமை காணத்தக்கது.

கம்பன் காவியத்தில் நாம் நான்கு அரசுகளைக் காண்கின்றோம்; நான்கும் கோனாட்சிகளே. இந்த நான்கிலும் மன்னன் சம்பந்தப்பட்ட திகழ்ச்சிகளைப் பொது மக்கள் திறனாய்வதைக் காண்கின்றோம். சுமார் ஐம்பதாண்டுகட்குமேல் குடியாட்சியில் பழகி அரசினர் மேற்கொள்ளும் நடவடிக்கைகளைத் திறனாயும் நமக்கு, அரசாங்க அலுவல்களைப் பொது மக்கள் எந்த அளவுக்குத் திறனாய முடியும் என்பது விளங்காமற் போகாது. கோனாட்சியாக இருந்தாலும் பொதுமக்கள் அரசங்க விஷயங்களிலும் அரசன் சம்பந்தப்பட்ட பிற துறைகளிலும் ஒரளவு பங்கு பெற்று இருந்தனர். முடியாட்சியாக இருந்தாலும் அரசனும் தான் மக்களுக்காகவே இருப்பதாக உணர்வதையும் மக்களும் தமது நிலைமையை ஒரளவு நன்கு உணர்ந்திருப்பதையும் கம்பன் நமக்கு இலைமறைகாய்கள் போல் சுட்டி உரைக்கின்றான். அவ்வாறு சுட்டி உரைக்கும் இடங்களைக் காட்டுவேன்.

அயோத்தி அரசு காவியத்தில் முதன் முதலாக நாம் காண்பது அயோத்தி அரசு. எடுத்த எடுப்பில் அரசனைக் காட்டும் கவிஞன்,

35. பாலகா. அரசியல் - 10