பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 ல் பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

பழகும் அமைச்சர்களை யோசனை கேட்பதால், மக்களையே கேட்பதாகும் என்று எண்ணியே மந்திரி மார்களுடன் சூழ்ந்தெண்ண நினைக்கின்றான்; அதன் பிறகும் சிற்றரசர்கட்கும் ஒலை போக்கித் தன் கருத்தைத் தெரிவிக்கின்றான். அமைச்சரவையும் வேத்தவையும் இராமன் முடிபுனைதற்கு ஒருமுகமாக உடன்பாட்டைத் தெரிவிக்கின்றன. அரசர்களைப் பார்த்துத் தயரதன் பேசும் பேச்சு நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளுகின்றது.

செம்மையில் தருமத்தில் செயலில் தீங்கிலா வெம்மையின் ஒழுக்கத்தின் மேன்மை மேவிளிர் என்மகன் என்பதென் ? நெறியின் ஈங்கிவன் தும்மகன் கையடை நோக்கும் ஈங்கென்றான்

"இவனை என்மகன் என்று எண்ணவேண்டா; நும்மகன் போலவே கருதி, இவனுக்கு யாதொரு குறையும் வராமல் பாதுகாத்து வாருங்கள்" என்று கூறும் மன்னர் மன்னன் வாக்கில் மக்கள் குரலுக்கு எவ்வளவு மதிப்பு தருகின்றான் என்பதையும் அறியலாம், இன்னும் பல இடங்கள் உள்ளன. விரிவஞ்சி இத்துடன் நிறுத்தி அடுத்த அரசைக் காண்போம். மிதிலை அரசு: அக்காலத்தில் மிதிலையிலும் கோனாட்சியே நிலவி வந்தது. என்றாலும் அங்கும் அரசாட்சியில் மக்கள் மிகவும் அக்கறை கொண்டிருந்தனர். சனகன் சீதைக்குக் கன்யாசுல்கமாக வைத்திருந்த வில்லை யாரும் வளைத்து நாணேற்ற முடியாததால் சீதையின் திருமணம் நடைபெறாமலே இருந்தது. அந்த வில்லை இராமன் வளைத்து நாணேற்றும் சந்தர்ப்பம் வருகின்றது; ஈசனது வில்லும் இராமனுக்கு முன்னர் கொண்டு வரப் பெறுகின்றது. பேராற்றலையுடைய அறுபதினாயிரம் பேர் அதனைச் சுமந்து கொண்டு வருகின்றனர். இதனைக் கண்ட மக்கள் பலர் பலவாறு பேசிக் கொள்ளுகின்றனர்.

38. அயோத்தி - மந்திரப். 87