பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 125

சீதாப்பிராட்டியின் திருமணத்தில்-தம் நாட்டு வேந்தன் மகள் திருமணத்தில்-அதிக அக்கறை கொண்டிருந் தவர்கட்குச் சனகன் வில்லைப் பணயமாக வைத்தது பிடிக்கவில்லை. வில்லே பிராட்டியின் திருமணத்திற்குப் பெருந்தடையாக உள்ளது என்று எண்ணுகின்றனர். ஓரிடத்தில் "இந்த வில்லைக் கொண்டுவருக என்று எதற்காகச் சொன்னான் இவ்வரசன்' என்பர் சிலர்: மற்றும் சிலர் “வில்லைக் கன்யாசுல்கமாக வைத்த இவனைப் போல் அறிவுக் கேடரான அரசர்களும் உளரோ?” என்று கூறுவர். முற்பிறப்பிற் செய்த ஊழ்வினையினால்தான் ஒருகால் இச்செயல் கூடினாலும் கூடலாம்” என்று வேறு சிலர் உரைப்பர்; பின்னும் சிலர் "சீதாப் பிராட்டியாவது இந்து வில்லைப் பார்த்திருக்கக் கூடுமா?" என்று மொழிவர் 9. மற்றோரிடத்தில் மக்கள் பேசிக் கொள்வதையும் கவிஞன் காட்டுகின்றான்.

இச்சிலை யுதைத்தகோற் கிலக்க மியாதென்பார் நச்சிலை நங்கைமே னாட்டும் வேந்தென்பார் நிச்சயம் எடுக்குங்கொல் ? நேமி யான்என்பார் சிற்சிலர் விதிசெய்த தீமைதான் என்பார்"

இத்துணைப் பெரிதாக உள்ள வில்லுக்கு ஏற்ற இலக்கு இவ்வுலகிலேயே இல்லை என்று சிலர் கூற, வேறு சிலர் "இது வளைத்து இலக்கின்மேல் எய்வதற்கா அமைந்த வில் அன்று: பிராட்டியின் திருமணத்திற்குப் பணையமாக இருக்கும் பொருட்டே அமைந்தது" என்று மாறு கூற, "இந்த இராகவன் தவறாது எடுப்பனோ? என்று சிலர் வருந்த, மற்றுஞ் சிலர் "சீதாப் பிராட்டியின் திருமணம் இனிது நடைபெற அதனைக் காண வேண்டும் என்று எதிர் நோக்கியிருக்கின்ற நம்முடைய தீவினைப் பயனே இங்ங்ணம்

39. பாலகா, கார்முகப் - 8 40. மேற்படி - 9