பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

வில் வடிவாக அமைந்துள்ளது” என்று வெறுத்துக் கூறலாயினர். -

மகளிர் கூட்டத்திலும் பேச்சு நிகழத்தான் செய்கின்றது. அனைவரும் அரசன் பெரிய வில்லைத் திருமணத்திற்குத் தடையாக வைத்தது பெரும் பிழை என்று ஒருமுகமாகத் தம் கருத்தைத் தெரிவிக்கின்றனர். வள்ளல் மணத்தை மகிழ்ந்தனன் என்றால் கொள்ளென முன்பு கொடுப்பதை அல்லால் வெள்ள மணைத்தவன் வில்லை எடுத்துஇப் பிள்ளைமுன் இட்டது பேதைமை என்பார். ஞான முனிக்கொரு நாணிலை என்பார் கோனிது னிற்கொடி யோன்.இலை என்பார் மானவன் இச்சிலை கால்வளை யானேல் பின தனத்தவள் பேறிலள் என்பார்"

(கால் - முனை; பீன - பெருத்த)

"பிராட்டியின் திருமணத்தில் அரசன் உண்மையில் அக்கறை கொண்டவனாக இருந்தால், தகுந்த மணமகன் வந்தபொழுதே திருமணத்தை முடித்துவிட வேண்டும். சிவதனுசைக் குறுக்கே கொண்டு வந்து போடுவதனால் திருமணத்தில் அக்கறை இல்லை என்றாகின்றது; அல்லது. தன் வம்சம் இழந்தவனாக இருக்க வேண்டும்" - இங்ங்னம் ஒரு பேச்சு நிகழ்கின்றது. "விசுவாமித்திரனுக்காவது மதி வேண்டும்; அவனும் வில்லை முறிக்க அனுமதி தந்துவிட்டான். இந்த அரசனைக் காட்டிலும் கொடியவன் இவ்வுலகில் இல்லை. இராமன் இந்த வில்லை வளையானாகில், பிராட்டிக்கு வாழ்வே இல்லை"-இப்படி ஒரு பேச்சு நிகழ்கின்றது. மிதிலை ஆட்சியில் இதற்குமேல் மக்கள் குரலைப் பற்றி அறியக் கூடவில்லை.

41. பாலகா. கார்முகம். 30,31