பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 127

கிட்கிந்தை அரசு இது குரக்கர்களின் அரசு. வாலி கொடுத்த தொல்லையைத் தாங்க முடியாமல் சுக்கிரீவனும் அநுமன் உட்படப் பல வானவீரர்களும் ருசியமுக பருவதத்தைத் தம் இருப்பிடமாகக் கொண்டு வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் இராம-சுக்கிரீவ நட்பு ஏற்படுகின்றது. சுக்கிரீவனைப் பலர் சூழ்ந்திருந்தனர் என்பதிலிருந்தே அவனை ஆதரிக்கும் ஒரு வானரக் கூட்டம் இருந்ததாகக் கருதவேண்டியுள்ளது. தவிர, மக்கள் கருத்திற்கிசைந்தே வானர ஆட்சியும். நடைபெற்றுவந்தது என்பதற்கு வேறொரு சான்றும் உள்ளது. இது மாயாவி பற்றிய குறிப்பால் அறியமுடிகின்றது. பிலம்புக்க வாலி நீண்டநாள் திரும்பாததால் வானர குலத்திலுள்ள சில பெரியோர்களின் விருப்பத்திற்கிணங்க சுக்கிரீவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டான். இதனால் சுக்கிரீவன் மக்கள் குரலுக்கு மதிப்பு கொடுத்து மன்னனாக இருக்க ஒருப்பட்டான் என்பது அறியக் கிடக்கின்றது.

வாலி இறந்ததனால் தாரை, அங்கதனைத் தவிர வேறு ஒருவரும் துக்கப்பட்டதாகக் கவிஞன் காட்டவில்லை. கோசல நாட்டிலும் மிதிலை நாட்டிலும் அரசகுடும்ப நிகழ்ச்சிகளில்எல்லாம் மக்கள் குரலைக் காட்டிய கவிஞன் கிட்கிந்தை நாட்டு அரசன் இறந்ததற்குக் கூட மக்கள் உட்கிடக்கையைக் காட்டாததால், வாலியின் ஆட்சி மக்கள் கருத்திற்கிணங்க நடைபெறவில்லை என்று ஊகிக்க இடம் தருகின்றது.

சுக்கிரீவனுக்கு முடி புனைந்து சில அரச நீதிகளைப் புகட்டுகின்றான் இராமன். அவற்றின் சாரம் மக்கள் குரலுக்கு மதிப்பு கொடுக்க வேண்டும் என்பதே. மக்கள் கொதித்தெழுந்தால் பெரிய வல்லரசும் கவிழ்ந்துவிடும் என்பதைக் கவிஞன் இராமன் மூலமாகப் பேசுகின்றான் என்று கொள்வதே ஏற்புடைத்து.