பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

இவள் இலங்கை நகரின் வடதிசை வாயிலாக நகருக்குள் துழைகின்றாள்; தன்னுடைய குறையை உரக்கக் கூறிக் கொண்டு வருகின்றாள். அவளது அவலநிலையைக் கண்ட அரக்கப் பெருமக்கள் மிகவும் துயருறுகின்றனர். முக்கியமாக மகளிர் சோகத்துடன் அழுகின்றனர். அவளைக் கண்ணுற்ற ஆண்மக்கள் ஒன்றும் சொல்லத் தெரியாதவராய்த் திகைத்து நிற்கின்றனர். கோபக் கனல் தெறிக்க உதட்டைக் கடித்துக்கொண்டு வாளாநிற்கின்றனர். பலர் பலவாறு இது பற்றி ஐயப்படுகின்றனர். இன்னும் சிலர் சூர்ப்பணனைக்கு ஏற்பட்ட செய்கையில் ஏதோ சூழ்ச்சி இருக்க வேண்டும் என ஐயுறுகின்றனர்.

என்னையே இராவணன் தங்கை என்றபின் அன்னையே என்றடி வணங்கல் அன்றியே உன்னவே யொண்ணுமோ ஒருவ ரால்இவள் தன்னையே அரிந்தனள் தான்என்றார் சிலர்

அவளாகவே அரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பது சிலரது ஐயம். இக்கருத்தையே இன்னொரு விதமாக வீடணன் கொண்டிருத்தலைப் பின்னால் காண்கின்றோம்.

கொல்லாத மைத்துனனைக் கொன்றாய் என்று)

அதுகுறித்துக் கொடுமை சூழ்ந்து

பல்லாலே இதழ்அதுக்கும் கொடும்பாவி

நெடும்பாரில் பழிதீர்ந் தாளோ?"

என்று இதனைக் கம்பன்காட்டுவான். வேறு சிலர் ஒருகால் இவள் கற்புநிலை கடந்து விட்டாள் என்று கரன் கருதி இவளை அழகற்றவளாகச் செய்திருக்கக் கூடுமோ? என்று அயிர்க்கின்றனர். இந்த இடத்தில் பொதுமக்கள் பலவாறு தத்தமக்குத் தோன்றியவாறு பேசுவதைக் காண்கின்றோம்.

45. மேற்படி - 30 46. யுத்த. இராவணன் வதை - 225