பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

வேண்டிய இடங்களை நிரல்படக் கூறி வருங்கால் அருந்ததி மலையைக் குறிப்பிடுகின்றான் சுக்கிரீவன்.

அரன்அதிகன் உலகளந்த அரிஅதிகன்

என்றுரைக்கும் அறிவி லார்க்குப் பரகதிசென்று அடைவரிய பரிசேபோல்

புகலரிய பண்பிற் றாமால் கரநதியின் அயலதுவான் தோய்குடுமிச்

சுடர்த்தொகைய தொழுவோர்க் கெல்லாம் வரனதிகத் தருந்தகைய தருந்ததிமா

நெடுமலையை வணங்கி அப்பால்" "திருமாலே பரம் பொருளாக இருக்கவும், அந்த உண்மையை உணரமாட்டாமல் "சிவபெருமான் சிறந்தவனா? அல்லது திருமால்தான் சிறந்தவனா? என்று ஒருவகையாலும் கலங்கிக் கூறுகின்ற மூடர்கட்கு நற்கதி சேர அரிதாக இருக்கும்; அதுபோல இந்த அருந்ததி மலையும் எவர்க்கும் சென்று சேர அரிதாக இருக்கும்” என்கின்றான் சுக்கிரீவன். சுக்கிரீவன் வாயில் வைத்துப் பேசுபவன் கம்பநாடன். உலகலந்த' என்ற அடைமொழியைத் திருமாலுக்குச் சேர்த்துக் கூறியதனால், நான்முகனாரது உலகம் உட்பட எல்லா உலகங்களையும் தனது திருவடிகட்குக் கீழ்படுத்திக் கொண்ட சிறப்பையும், சிவபெருமான் தனது சிரமேல் கொள்ளுமாறு திருவடியினின்று கங்கையைப் பயந்த மேன்மையையும் வெளிப்படுத்துதல் மூலமாக, அத்திருமாலே பரதத்துவ மென்று வெளியிட்டார் என்பர். இவ்வாறு மேன்மையைப் புலப்படுத்தும் அடைமொழி ஒன்றும் சிவபெருமானுக்குக் கொடுத்துக் கூறாதது சிந்திக்கத்தக்கது. அரன் அதிகன் உறவளர்ந்த அரிஅதிகன் என்று உணரா அறிவிலார்க்குப்,

10. கிட்கிந்தை - நாடவிட்ட - 24