பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நம்பிக்கைகள் 133

வேதினம் வெரிநின் ஓதி முதுபோத்து

ஆறுசென் மாக்கள் புட்கொளப் பொருந்தும்

சுரனே சென்றனர் காதலர்".

"கருக்கரிவாளைப் போன்ற முதுகையுடைய முதிய

ஆண் ஓந்தியானது வழிச்செல் மனிதர்கள் நிமித்தமாகக் கொள்ளும்படி பாலை நிலத்தில் தலைவர் சென்றனர்” என்று தோழிக்குத் தலைமகள் சொல்லுகின்றாள். ஓந்தியும் நன்னிமித்தம் பார்த்தற்குரியது என்பதை டாக்டர் உ.வே.சா. அவர்கள் அறப்பளிசுர சதகத்திலிருந்து நாவி சிச்சிலி ஒந்திதான். வலமாயின் வழிப்பயணமானது நன்றாம்” என்ற அடியை எடுத்துக்காட்டுவர்.

சிலப்பதிகாரத்திலும் நிமித்தம் பற்றிய குறிப்பு வருகின்றது. கோவலன் பொற்கொல்லன் சூழ்ச்சியால் கொலையுறுகின்றான்" இதனை உணர்த்துவதுபோல் ஆயர் சேரியில் பல உற்பாதங்கள் திகழ்கின்றன. (1) உறையிட்ட தாழிகளில் பால் தோய்ந்திலது, இமில் ஏற்றின் அழகிய கண்களினின்றும் நீர் உகுகின்றது. ஆதலால் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு. (2) உறியில் முதல் நாள் வைத்த வெண்ணெயை உருக வைத்தால் உருகவில்லை; ஆட்டுக் குட்டிகளும் துள்ளி விளையாடாமல் குழைந்து கிடக்கின்றன. ஆதலால் நமக்கு வருவதோர் தீங்கு உண்டு (3) நான்கு காம்புகளையுடைய பசுநிரை நடுங்கி நின்று அரற்றுகின்றது; அப்பசுக்களின் கழுத்தில் கட்டிய மணிகளும் அற்று நிலத்தில் வீழும். ஆதலால் நமக்கு வரும் தீங்கு ஒன்று உண்டு.

இவ்வாறு ஐயை தன் மகளை நோக்கி "மனம் கவலற்க, இந்நிலத்து மாதர்க்கு அணியாக விளங்கும்

48. குறுந் 140 49. சிலப். கொலைக்களக் காதை,