பக்கம்:பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136 பண்பாட்டு நோக்கில் கம்பன் காவியம்

ஊரெல்லாம் தேடிய அதுமான் சீதை எவ்விடத்தும் காணப் பெறாததால் “கண்டு வரும் என்றிருக்கும் காகுத்தன்; கவிக்குலக்கோன் கொண்டு வரும் என்றிருக்கும்; அவர்கள் அங்கனம் மிக நம்பிக்கையுடன் இருக்கையில், என் செயலோ பயனற்றதாயுளதே” என்றும் இன்னும் பலவாறும் வருந்தியநிலையில் அசோகவனத்தைக் காண்கின்றான்; அங்குச் செல்கின்றான். அப்போது அங்கு இருந்த சீதாப்பிராட்டியும் அரக்கியர் கூட்டத்தினர் நடுவே பலவாறு வருந்திய நிலையில் உள்ளாள்

திரிசடையைத் தவிர மற்றை அரக்கியர் யாவரும் தள்ளிரவில் மயங்கிக் கிடக்கின்றனர். அப்போதகு பிராட்டி தனக்கு நேர்ந்த நன்னிமித்தங்களைக் கூறி யாது பயன்விளையுமோ என வினவுகின்றாள். "புருவமும் கண்ணும் நெற்றியும் வலப்பக்கம் துடிக்காமல் இடப்பக்கமே துடிக்கின்றன. இதனால் வரும். பயன் இன்னதென்று കൂിക്കാണ് முன்பு இராமன் விசுவாமித்திரனோடு மிதிலாபுரியில் புகும் போது என்புருவமும், தோளும், கண்ணும் இனிமைவிளைவிப்பனவாய் இடம் துடித்தன, ஈண்டும் அன்று துடித்தாற் போலவே நன்றாக இடந்துடிக்கின்றன. இதன் È i lLÍ Gð) 6MT ஆய்ந்து சொல்வாயாக’ என்று வேண்டுவதைக் காண்கின்றோம்.

தொடர்ந்து கூறுவாள்; "இன்னும் கேட்பாயாக என் கொழுநனான இராம்பிரான் இப்புவிமுழுதும் தன் தம்பி பரதனே பெறும்படி அயோத்தியை விட்டுக் கானகத்திற்கு வரும்பொழுது புருவம் முதலியவற்றின் வலப் புறம் துடித்திது" “நஞ்சனைய இராவணன் தண்ட

52. சுந்தர. காட்சிப் - 32 53. மேற்படி - 33 54. கந்தர. காட்சி - 34